Friday, 13 May 2016

பரிமள சுகந்த நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வர ஸ்வாமி

மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1-கி.மீ. தூரத்தில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குத்தாலம் பரிமள சுகந்த நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வர ஸ்வாமி தலம்:
தலத்தின் சிரப்பு:
(1)     சுந்தர்ருக்கு பிணி நீக்கிய தலம்
(2)     சிவபெருமானுக்கு கைலையிலிருந்த உத்தாலமரம் நிழலாக வந்த சிறப்புடையது.
(3)     காசிக்கு நிகரானது.
(4)     சோழர்,விஜய நகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.






இறைவர் திருப்பெயர்   : உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்,
                                      கற்றளி மகாதேவர்

இறைவியார் திருப்பெயர் : மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி,
                                          அரும்பன்ன வனமுலையாள்

தல மரம்                         : குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)

தீர்த்தம்                            : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம் 
                                                          வடகுளம்

வழிபட்டோர்                    : உமாதேவியார், வருணண், காளி,   அக்னி, சப்த
                                                         ரிஷிகள்(காசிபர், ஆங்கிரசர், கௌதமர்,
                                                        மார்க்கண்டேயர், வசிஷ்டர்,புலஸ்தியர்,  
                                                        அகஸ்தியர்)

தேவாரப் பாடல்கள்        :
   A. சம்பந்தர்                -       1. வரைத்தலைப் பசும்,
                                                      2. ஓங்கிமேல் உழிதரும்.

   B. அப்பர்                              -        பொருத்திய குரம்பை தன்னை.

   C. சுந்தரர்                             -     1. மின்னுமா மேகங்கள்,
                                                     2. மூப்பதும் இல்லை பிறப்பதும்

   D. ஐயடிகள் காடவர்கோன் -     வஞ்சியன நுண்ணிடையார்


பூமியில் வேறு எங்கும் காண முடியாத இந்த உத்தாலமரம் இத்தலத்தில் காணமுடிகிறது.  ஈஸ்வரன் கல்யாண திருகோலத்தில் பூமிக்கு வருகையில் இந்த உத்தாலமரம் ஈஸ்வரனுக்கு நிழ்ற்கொடையாக கைலசதிலிருந்து வந்ததாக சொல்லபடுகிறது.

இங்குஉள்ள கோபுர சிற்பங்கள் மிகவும் அழகாகவும், பெரியதாகவும், வித்யாசமாகவும் உள்ளது.





இப் புனித தலத்திற்கு 1-2-1960 இல் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆட்சியில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் செய்யப்பெற்று மிக பொலிவுடன் திகந்துள்ளது.

இந்த புண்ணியமான ஸ்தல கோபுரங்கள், குளம் மற்றும் மதில் சுவர்கள் அனைத்தின் இன்றிய நிலை பார்பவர்களுக்கும் பல கோடி சிவனடியார்களுக்கும் மிகவும் வருத்ததையும், வேதனையும் தருகிறது - பாருங்கள் படத்தை நமது பொக்கிஷம் வீன்போவதை - 56 வருடம் கடந்து விட்டது – 1960க்கு பிறகு கும்பாபிஷேகம் இன்று வரையில் இத் திருகோயிலிக்கு நடைபெறவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குறிய விஷயம்.

Sunday, 12 January 2014

தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை

 பெரும்பேர்கண்டிகையில் உள்ள  தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயிலின் ஸ்தல புராணம் :



சுவாமி சுயம்பு.
 5000 வருடத்திற்கு மேல் பழமையான கோயில். 5300 வருடம் பழமையானது என்று காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட புத்தகம் குறிப்பிடுகிறது.


திருவாத்தி மரத்தின் அடியில் அகத்தியர்க்கு ஸனகாதி முனிவர்களுடன் சிவபெருமான் திருமணக் காட்சி கொடுத்தது. இந்த திருவாத்தி மரத்தின் வயது  5000 வருஷங்களுக்கு மேல்.


விக்ரமாதித்தன் வழி பட்ட ஸ்தலம்.மிக அபூர்வமாக, இங்கு, வன துர்க்கைக்கு மான் வாஹனம் உள்ளது. வன துர்க்கை விக்ரஹத்தில் விக்ரமாதித்தன் வழிபடும் காட்சியும் உள்ளது.பெரிய அளவில் அகத்தியர் விக்ரஹம் உள்ளது.


திருவக்கரையில் துன்முகி  அரக்கியை சம்ஹாரம் செய்த காளி, அதே அவதாரத்தில் சண்டமுண்டனை இங்கு வதம் செய்தாள். ஆகையால் சாமுண்டேஸ்வரி என்று பெயர்.அரக்கி கர்ப்பமாக இருந்ததால், அவள் வயிற்றைக்          கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து தனது  காதில் குண்டலமாக அந்த              குழந்தையை வைத்துக் கொண்டு அரக்கியை வதம் செய்தாள். திருவக்கரையில் 

இந்த வதம் செய்த அம்பாள் அதே கோலத்தில் இங்கே காட்சி தருகிறாள். திரிபுர சம்ஹாரதிற்கு புறப்பட்ட சிவ பெருமானின் தேர் அச்சு முறிந்தது. அவ்வழியாக வந்த அகத்தியர் இங்குள்ள முருகனை வழிபட்டு பின் அம்பாளிடம் திருமணக்            காட்சி வேண்ட, அம்பாளும் இறைவனைத் தடுத்து இங்கு அழைத்து வந்து                திருமணக் காட்சி கொடுத்ததால் , தடுத்தாட்கொண்ட நாயகி என்று பெயர்.


இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும்முருகன்,  அச்சிறுபாக்கத்திலிருந்து சுவாமியையும் அம்பாளையும் ஊர்வலமாக இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 


முதலாம் குலோத்துங்கச் சோழனும், இரண்டாம் இராஜ இராஜ சோழனும் இக்கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


இப்போதுள்ள ரவிச்சந்திரன் சிவாச்சாரியாரின் மூதாதையர்கள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை சுவாமிக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. 834 ம் வருஷம் முதல் (சுமார் 1200 வருஷங்கள்) இவர்கள்          பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு பூஜை செய்து வருகிறார்கள்.



காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ரவிச்சந்திர சிவாச்சாரியாருக்கு, அவரது இறை சேவையைப் பாராட்டி, "பகவத் சேவை மணி " என்று சான்றிதழ் கொடுத்தள்ளார்கள்.

                                          ***************************************

Thursday, 26 December 2013

NAVARAATHRI NAYAGI AT DU(R)GACHI - A SIVA STHALAM

The pathetic condition of a Shiva temple- Sri Soundaranayaki sametha Sri Aabathsahayeswara temple at Du(R)ga(T)chi,which is called as Thukkachi by the locals.This place is located between Naachiyar Koil on Kumbakonam-Thiruvarur road and Poonthottam on Mayiladuthurai-Thiruvarur road......please click to read on.