Sunday, 12 January 2014

தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை

 பெரும்பேர்கண்டிகையில் உள்ள  தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயிலின் ஸ்தல புராணம் :



சுவாமி சுயம்பு.
 5000 வருடத்திற்கு மேல் பழமையான கோயில். 5300 வருடம் பழமையானது என்று காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட புத்தகம் குறிப்பிடுகிறது.


திருவாத்தி மரத்தின் அடியில் அகத்தியர்க்கு ஸனகாதி முனிவர்களுடன் சிவபெருமான் திருமணக் காட்சி கொடுத்தது. இந்த திருவாத்தி மரத்தின் வயது  5000 வருஷங்களுக்கு மேல்.


விக்ரமாதித்தன் வழி பட்ட ஸ்தலம்.மிக அபூர்வமாக, இங்கு, வன துர்க்கைக்கு மான் வாஹனம் உள்ளது. வன துர்க்கை விக்ரஹத்தில் விக்ரமாதித்தன் வழிபடும் காட்சியும் உள்ளது.பெரிய அளவில் அகத்தியர் விக்ரஹம் உள்ளது.


திருவக்கரையில் துன்முகி  அரக்கியை சம்ஹாரம் செய்த காளி, அதே அவதாரத்தில் சண்டமுண்டனை இங்கு வதம் செய்தாள். ஆகையால் சாமுண்டேஸ்வரி என்று பெயர்.அரக்கி கர்ப்பமாக இருந்ததால், அவள் வயிற்றைக்          கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து தனது  காதில் குண்டலமாக அந்த              குழந்தையை வைத்துக் கொண்டு அரக்கியை வதம் செய்தாள். திருவக்கரையில் 

இந்த வதம் செய்த அம்பாள் அதே கோலத்தில் இங்கே காட்சி தருகிறாள். திரிபுர சம்ஹாரதிற்கு புறப்பட்ட சிவ பெருமானின் தேர் அச்சு முறிந்தது. அவ்வழியாக வந்த அகத்தியர் இங்குள்ள முருகனை வழிபட்டு பின் அம்பாளிடம் திருமணக்            காட்சி வேண்ட, அம்பாளும் இறைவனைத் தடுத்து இங்கு அழைத்து வந்து                திருமணக் காட்சி கொடுத்ததால் , தடுத்தாட்கொண்ட நாயகி என்று பெயர்.


இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும்முருகன்,  அச்சிறுபாக்கத்திலிருந்து சுவாமியையும் அம்பாளையும் ஊர்வலமாக இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 


முதலாம் குலோத்துங்கச் சோழனும், இரண்டாம் இராஜ இராஜ சோழனும் இக்கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


இப்போதுள்ள ரவிச்சந்திரன் சிவாச்சாரியாரின் மூதாதையர்கள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை சுவாமிக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. 834 ம் வருஷம் முதல் (சுமார் 1200 வருஷங்கள்) இவர்கள்          பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு பூஜை செய்து வருகிறார்கள்.



காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ரவிச்சந்திர சிவாச்சாரியாருக்கு, அவரது இறை சேவையைப் பாராட்டி, "பகவத் சேவை மணி " என்று சான்றிதழ் கொடுத்தள்ளார்கள்.

                                          ***************************************